Wednesday, November 07, 2007

பிரிவு

ஞாபகமில்லாத ஒரு நாளில்,
எதேச்சையாக
சந்தித்தது நம் கண்கள்.
நொடிக்கூட தாமதியாமல்
இன்னொருமுறை
என்றது என் உள்மனது.
சற்றும் கூச்சமின்றி
உன் மனதும்..!
பின் -
தேநீர்
அருந்திக்கொண்டிருக்கையில்,
செல்போனில் எவருடனோ
பேசிக்கொண்டிருக்கையில்,
மதியவுணவருந்திக்
கொண்டிருக்கையில்,
வேலையாக கணிப்பொறியுடன்
போராடிக்கொண்டிருக்கையில்,
இன்னும்
எத்தனை எத்தனையோ
சூழல்களில்
நம் பார்வைகள் பேசிக்கொண்டது.
இதோ விதி இன்று
பிரியச்சொல்லி சிரிக்கிறது.
.
.
நாளை
உன் கண்கள்
என்னை தேடுகையில்,
மிஞ்சும் ஏமாற்றங்களில்,
மொத்தமாய் ஒளிந்திருக்கும்
நம் உறவிற்கு
என்ன பெயரென்றுக் கேட்டு-
மறவாமல் எனக்கொரு
மின்னஞ்சல் அனுப்பு..

0 comments: