Wednesday, March 19, 2008

ஆயாசம்

எதைபற்றி பேசுகிறாய்
என்று யோசிப்பதை விட்டுவிட்டு
எப்படி பேசுகிறாய்
என்று கவனித்த நாட்களிலும்
எங்கு கூட்டிச்செல்கிறாய்
என்று கவனிக்காமல்
எப்படி நடந்து செல்கிறாய்
என்று ரசித்த நாட்களிலும்
எதற்கு சிரிக்கிறாய்
என்று கேட்காமல்
எப்படி சிரிக்கிறாய்
என்று உண்ர்ந்த நாட்களிலும்
நிச்சயமாய்
கவனிக்கவில்லை-
நானும் உன்னோடு
பேசி, நடந்து,
சிரித்துக்கொண்டிருக்கிறேன்
என்பதை..