Wednesday, March 19, 2008

ரணம்

விடிந்ததும்
அறைநண்பன் கூறிய
நகைச்சுவைக்காக
ஒரு சிரிப்பு.
போகும் வழியில்
வானொலியில் கேட்ட
நகைச்சுவைக்காக
இன்னொரு சிரிப்பு.
அலுவலகத்தில்
யாரோ கடித்த கடிக்கும்,
காதில் விழுந்த ரகசியத்துக்கும்,
ஒரு வறண்ட சிரிப்பு.
பின்,
மாலையில்
தொலைகாட்சியில் பார்த்த
நகைச்சுவை காட்சிக்காக
ஒரு சிரிப்பென்று
நாள்முழுக்க ஆங்காங்கே
சிரித்துக்கொண்டிருந்தாலும்
இரவுகள்
என்னை
அழவைக்கவே காத்திருக்கிறது
உன் நினைவுகளோடு..

3 comments:

Shakthi said...

great da machan......

sivamanjunathan said...

very nice...excellent

Shakthi said...

Tis s de my very favourite one