கைபேசி வாங்கிய புதிதில்
அம்மாவென்று பெயரிட்டு
அம்மாவின் எண்ணையும்
அப்பாவென்று பெயரிட்டு
அப்பாவின் எண்ணையும்
சேமித்துவைத்தேன்
நாளடைவில்
அம்மாவின் எண்ணை அழைத்தால்
அப்பாவும்
அப்பாவின் எண்ணை அழைத்தால்
அம்மாவும் பேசினார்கள்
காதலித்து மணமுடித்தவர்களை
எப்படியெல்லாம் காதலித்தீர்கள் எனக்
கேட்கும்போதெல்லாம்
வெட்கப்பட்டவர்களின் ரகசியத்தை
அழகாக அம்பலமாக்கியது
கைபேசி!
நன்றி: ஆனந்த விகடன்
The art of bus-riding
2 weeks ago
2 comments:
கலக்குற சந்துரு.. குட் ஒன்
அழகான கவிதை :-) வாழ்த்துக்கள் :-)
Post a Comment