எப்பொழுதும்போல
நேற்றும் காலையில்தான்
உலகம் விடிந்தது
உன் நினைவுதட்டிதான்
கண்விழித்தேன் நானும்
சூரியனும் வானில்தான்
பறந்துகொண்டிருந்தது
எல்லோரும் தரையில்தான்
நடந்து சொன்றார்கள்
வழியெங்கும் பூக்கள்கூட
பூத்துதான் கிடந்தது
அலுவலகம் வந்தடைந்து
உனை
சேலையில் கண்டதும்தான்
விளங்கிற்று
அதிசயங்கள் தீர்ந்துபோன ரகசியம்!
புதிய போராட்டம்...
1 week ago
0 comments:
Post a Comment