ஒரு காலையில்
நீ கொடுத்த புன்னகையை
நாள்முழுவதும் செலவழித்து
மீதமிருந்ததை இரவில்
கவிதையாக்கி வைத்தேன்
இன்றும் அதை
எப்பொழுது படித்தாலும்
தவறாமல் தொற்றிக்கொள்கிறது
அதே புன்னகை
நீ சூடிக்கொண்ட பின்
சிரிக்கும் பூக்களை போல
அத்தனை எளிதாய்..
புதிய போராட்டம்...
1 week ago
0 comments:
Post a Comment