உனை மூன்றாவது முறையாக
பார்க்க நேரிடுகையில்
அன்றைய தவணை
நன்றே முடிவடைகிறது
அதற்கடுத்து நிகழும்
ஒவ்வொரு சந்திப்பும்
பின்நாளிற்கான
சேமிப்பில் குவிகிறது
பார்க்காத நாளொன்றில்
சேமிப்பும் தீர்ந்துவிடுகையில்
நீ எங்கிருந்தாலும்
உனை தேடிவந்து
பார்க்க வைப்பது என்னவோ
உன் பார்வையும்
ஒரு இனம்புரியாத காரணமும்!
புதிய போராட்டம்...
1 week ago
0 comments:
Post a Comment