துள்ளிக் குதிக்கிறேன்
ஒரு வண்ணத்துபூச்சியிடம்
செல்லச் சண்டையிடுகிறேன்
பூக்களுக்கெல்லாம்
வணக்கம் சொல்கிறேன்
சிட்டுக்குருவியின் கால்களைப்பற்றி
பறந்து செல்கிறேன்
அத்தனை பற்களும்
தெரியும்படி சிரிக்கிறேன்
சுற்றித்திறிந்து பின்
மீண்டும் இருக்கைக்கு வந்து
காலையில் நீயனுப்பிய
மின்னஞ்சலை
எண்பதாவது முறையாக
படிக்கிறேன்!
புதிய போராட்டம்...
18 hours ago
2 comments:
நானும் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறேன்.. தங்களின் கவிதையைப் படித்து...
பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.!!
Nice da...
Post a Comment