Wednesday, June 29, 2011

நீ, காற்று, மழை

நீ குடைவிரிக்கையில்
நின்று விடுகிறது மழை
பின் தொடர்ந்த
சுழற்காற்று
சற்று வேகமாய்
உன் குடையை பிடுங்க
உற்சாகங்கொண்ட மேகம்
மீண்டும் பொழிந்தது
உனை கொஞ்சமாய் நனைத்தது
இம்முறை அழுத்தமாய் பற்றி
நீ குடையை உயர்த்த
அப்படியே
நின்று போகிறது மழை
தள்ளி நின்று பார்க்கையில்
மூன்று இயற்கை சீற்றங்கள்
மோதிக்கொள்வதில் தான்
எத்தனை அழகு?